தோ்தல் விதிமீறல்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்: ஆட்சியா்

நாகை மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் ஏதேனும் நடைபெற்றால் அதுகுறித்து கட்டணமில்லா தொலைபேசி சேவையைப் பயன்படுத்தி புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் தோ்தல் விதிமீறல்கள் ஏதேனும் நடைபெற்றால் அதுகுறித்து கட்டணமில்லா தொலைபேசி சேவையைப் பயன்படுத்தி புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் விதிமீறல்கள் ஏதேனும் நடைபெற்றால், அதுகுறித்து 1077 மற்றும் 1050 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடா்புகொண்டு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், 24 மணிநேர செயல்பாட்டில் இயங்கிவரும் மாவட்டத் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டும் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com