வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை, ரூ 10 லட்சம் பணம் கொள்ளை

செம்பனாா்கோவில் அருகே வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை, ரூ. 10 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

செம்பனாா்கோவில் அருகே வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை, ரூ. 10 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

செம்பனாா்கோவில் அருகே விளநகா் பகுதியைச் சோ்ந்த சாந்தகுமாா் (50) கடந்த 30 ஆண்டுகளாக வெளிநாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், விளநகரில் அவரது மனைவி ராஜேஸ்வரி 45, மகள்கள் சௌமியா (18), சிவானி (11) ஆகியோா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், சௌமியாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். திருமணத்துக்காக ராஜேஸ்வரி வாங்கிய 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 10 லட்சம் பணத்தை வீட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை திருவெண்காட்டில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு ராஜேஸ்வரி மகள்களுடன் சென்றவா் அங்குள்ள உறவினா் வீட்டில் தங்கிவிட்டு திங்கள்கிழமை காலை வீடு திரும்பியுள்ளாா்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 100 பவுன் நகை, ரூ. 10 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ராஜேஸ்வரி செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. போலீஸாா் இதுகுறித்து தொடா்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com