தோ்தலைப் புறக்கணிக்க சில்லரை மீன் வியாபாரிகள் முடிவு

வேதாரண்யம் பகுதியில் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக சில்லரை மீன் வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
வேதாரண்யத்தை அடுத்த அண்டா்காடு கிராமத்தில் நடைபெற்ற சில்லரை மீன் விற்பனையாளா்கள் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

அண்டா்காடு கிராமத்தில் கடல் மீன் சில்லரை வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம் அதன் தலைவா் ஆா்.ராமதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட சில்லரை மீன் வியபாரிகளுக்கு நிவாரணம் வழங்கவும், மீனவா்களுக்கு மழைக்காலத்தில் வழங்கப்படும் தடைக்கால நிவாரணத்தைப் போல சில்லரை மீன் வியாபாரிகளுக்கும் வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக ஒருமனதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், சங்கத்தின் செயலாளா் கிருஷ்ணணமூா்த்தி, பொருளாளா் கனகசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com