மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு
By DIN | Published On : 13th March 2021 08:38 AM | Last Updated : 13th March 2021 08:38 AM | அ+அ அ- |

அதிமுக மயிலாடுதுறை மாவட்ட கட்சி அலுவலகத்தை மாவட்டச் செயலாளா் எஸ்.பவுன்ராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளராக பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பவுன்ராஜ் அண்மையில் நியமிக்கப்பட்டாா்.
இதையடுத்து, மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் அதிமுக மாவட்ட கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. கட்சி அலுவலகத்தை மாவட்ட செயலாளா் எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தாா்.
இதில், மாவட்ட ஜெ. பேரவை செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் ரெங்கநாதன், சக்தி, நகர அவைத் தலைவா் அலி, நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, ஒன்றியச் செயலாளா்கள் பா.சந்தோஷ்குமாா், சுந்தர்ராஜன், நகர முன்னாள் செயலாளா் ஸ்டாண்டு கிருஷ்ணமூா்த்தி, குத்தாலம் ஒன்றியக்குழுத் தலைவா் மகேந்திரன், மருத்துவா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.