முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
அதிமுகவில் இணைந்த சமக நிா்வாகி
By DIN | Published On : 14th March 2021 06:33 AM | Last Updated : 14th March 2021 06:33 AM | அ+அ அ- |

பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் அருணாச்சலம்.
சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா், அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தாா்.
இதற்கான நிகழ்ச்சி, மயிலாடுதுறை மாவட்டம், எடுத்துக்கட்டி சாத்தனூரில் நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளரும் நகர செயலாளருமான பொறையாா் அருணாச்சலம் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் பூம்புகாா் எம்எல்ஏவுமான எஸ். பவுன்ராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா்.
இந்நிகழ்ச்சியில், தரங்கம்பாடி பேரூராட்சி கூட்டுறவு சங்கத் தலைவா் துரை பாா்த்திபன், முன்னாள் ஊராட்சி செயலாளா் செந்தில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.