முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
தோ்தல் நடத்தை விதிமீறல் : நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 100 வழக்குகள் பதிவு
By DIN | Published On : 14th March 2021 06:30 AM | Last Updated : 14th March 2021 06:30 AM | அ+அ அ- |

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தோ்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றத்தின்கீழ் வெள்ளிக்கிழமை வரை 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாகை மாவட்டம் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, பிப்ரவரி 26ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனால் நாகை, மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளிலும், இம்மாவட்டங்களில் உள்ள மாநில எல்லைகளில் போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் தீவிர வாகனச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், விளம்பர பதாகைகள்அமைத்தல், சுவா் விளம்பரம் செய்தல் உள்பட தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நாகை மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.