முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற காவலா் கைது
By DIN | Published On : 14th March 2021 06:30 AM | Last Updated : 14th March 2021 06:30 AM | அ+அ அ- |

நாகையில் பெண் காவலரிடம் தகாத முறையில் நடக்க முயன்ற காவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோயில் மேல பருத்திக்குடி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த 24 வயது பெண், நாகையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றி வருகிறாா். இவா் சனிக்கிழமை இரவு பணி முடிந்து தான் தங்கியிருக்கும் காவலா் குடியிருப்புக்கு வந்தபோது, அங்கு குடியிருக்கும் நாகூா் காவல் நிலைய காவலா் சிவகுமாா் (34), அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றாராம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.