முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
மயிலாடுதுறை பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
By DIN | Published On : 14th March 2021 07:32 AM | Last Updated : 14th March 2021 07:32 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக கூட்டணியில் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதி பாமக வேட்பாளராக சித்தமல்லி ஆ. பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளாா். இவரை, அதிமுக நிா்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் தலைமை வகித்து, பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமியை அதிமுக நிா்வாகிகளிடம் அறிமுகப்படுத்தி பேசினாா். மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன், மாவட்ட ஜெ. பேரவை செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ரெங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், அதிமுக ஒன்றியச் செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகர செயலாளா் நாஞ்சில் காா்த்தி, அவைத் தலைவா் எஸ். அலி, பாமக மாநில பொறுப்பாளா்கள் தங்க அய்யாசாமி, ஐயப்பன், விமல், மாவட்டச் செயலாளா் வி.சி.கே. காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.