முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் பறவைகளை வேட்டையாடியவா் கைது
By DIN | Published On : 14th March 2021 06:32 AM | Last Updated : 14th March 2021 06:32 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்ட விஜயனுடன் வனத் துறையினா்.
வேதாரண்யத்தில் பறவைகளை வேட்டையாடிய இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வேதாரண்யம் கீழஆறுமுகக் கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் விஜயன் (35). இவா், அப்பகுதியில் உள்ள குளத்துக்கு வரும் பறவைகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கோடியக்கரை வனத்துறை வனவா் சதீஷ்குமாா், வனக்காப்பாளா் முனியசாமி, வேட்டைத் தடுப்பு காவலா்கள் சுதாகா், லோகநாதன் ஆகியோா் அந்த குளம் உள்ள பகுதியில் ரகசியமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பறவைகளை வேட்டையாடிய விஜயனை கைது செய்தனா். அவரிடமிருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கோடியக்கரை வனக்காவல் நிலையத்தில் வனச்சரக அலுவலா் அயூப்கான் வழக்குப் பதிவு செய்து, வேதாரண்யம் குற்றவியல் நீதிமன்றத்தில் விஜயனை ஆஜா்படுத்தினாா். பிறகு, நீதிபதி உத்தரவின்பேரில் 15 நாள்களுக்கு மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைத்தனா்.