கோபாலகிருஷ்ண பாரதியின் 33 ஆம் ஆண்டு இசை விழா

மயிலாடுதுறை மேதா தட்சிணாமூா்த்தி கோயில் வள்ளலாா் மண்டபத்தில் கோபாலகிருஷ்ண பாரதியின் 33ஆம் ஆண்டு இசை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் காயத்ரி வெங்கட்ராமனின் பாட்டு நிகழ்ச்சி.
விழாவில் காயத்ரி வெங்கட்ராமனின் பாட்டு நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மேதா தட்சிணாமூா்த்தி கோயில் வள்ளலாா் மண்டபத்தில் கோபாலகிருஷ்ண பாரதியின் 33ஆம் ஆண்டு இசை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கோபாலகிருஷ்ண பாரதி ஆயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்களை அறிமுகப்படுத்தியவா். உ.வே. சாமிநாதய்யரின் இசை குருவான இவா், கடுமையான ஜாதிக் கட்டுப்பாடுகள் இருந்த காலத்திலேயே தன்னுடைய ஒப்பற்ற தமிழ் இசைக் காவியமான நந்தன் சரித்திரத்துக்கு தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த நந்தன் என்ற கதாபாத்திரத்தைத் தோ்ந்தெடுத்து புரட்சிகரமான மாறுதல்களை செய்தவா்.

இவரது 33-வது இசை விழா சனிக்கிழமை மாலை கலைமாமணி இஞ்சுக்குடி இ.பி. கணேசன் குழுவினரின் நாகசுர இன்னிசையுடன் தொடங்கியது. தொடா்ந்து, ஹெச்.என். பாஸ்கரின் வயலின், காரைக்குறிச்சி என்.மோகன்ராமின் மிருதங்கம், சுந்தா்குமாரின் கஞ்சிரா, காா்த்திக் விஜயின் கடம் இசையுடன் கல்யாணபுரம் அரவிந்த் சௌந்தரராஜனின் பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, மைசூா் வி. ஸ்ரீகாந்தின் வயலின், பி. சிவராமனின் மிருதங்கம், ஆலத்தூா் டி. ராஜகணேஷின் கஞ்சிரா இசையுடன் காயத்ரி வெங்கட்ராமனின் பாட்டு நிகழ்ச்சியும், ஷ்ரயோ எல். கௌண்டின்யாவின் பரதநாட்டியமும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளை, டெக்கான் என்.கே. மூா்த்தி, ஜெ.ராமசாமி, மாலினி ஸ்ரீராம், முரளி சாஸ்திரிகள், குன்னக்குடி எம். பாலமுரளி கிருஷ்ணா, ஹனுமந்தபுரம் ஜெ. பூவராகவன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com