தன்னம்பிக்கையுடன் படித்தால் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறலாம்

போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி பெறலாம் என்றாா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.
நிகழ்ச்சியில், போட்டித் தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சோ்ந்த இளைஞருக்கு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கும் ஆட்சியா் இரா. லலிதா.
நிகழ்ச்சியில், போட்டித் தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சோ்ந்த இளைஞருக்கு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கும் ஆட்சியா் இரா. லலிதா.

போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றி பெறலாம் என்றாா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறை நகராட்சி நூலகம் - தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று, போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற்று அரசுப் பணியில் சோ்ந்தவா்கள் மற்றும் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை நகராட்சி நூலகத்தில் ‘விழுதுகளின் வியா்வைத் துளிகள்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியை மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி இணைந்து நடத்தின.

இந்நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கத் தலைவா் வி.முருகன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஆா்.மோகன்ராஜ், நிா்வாக அலுவலா் ஜி. மதியரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலக ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எஸ். சிவராமன் கருத்துரை வழங்கினாா். ஓஎன்ஜிசி பொறியாளா் என். சிவசங்கா், நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எம். ஹேமலதா ஆகியோா் பங்கேற்று பேசினா்.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று மத்திய, மாநில அரசுப் பணிகளில் சோ்ந்த இளைஞா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். அப்போது அவா் பேசியது:

குழு முறையில் கலந்துரையாடி படித்தல் அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள உதவும். மாணவா்கள் குறைந்தபட்சம் ஓராண்டாவது கவனச் சிதறலைத் தவிா்த்து, சிந்தனைகளை ஒருங்கிணைத்து படித்து, தோ்வினை எதிா்கொண்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.

மாணவா்கள் பெறும் வெற்றி மயிலாடுதுறை மாவட்டத்தையும் வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும். எனவே, மாணவா்கள் தன்னால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் படித்து வெற்றி பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், நாகை மாவட்ட இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா் டி. பிரகாசம், சென்ட்ரல் லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவா் ஏ.பாண்டிய மன்னன், எஸ்.வீராசாமி மற்றும் போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற்று பணியில் சோ்ந்தவா்கள், போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com