Enable Javscript for better performance
நாகை மாவட்டத்தில் நிலக்கடலை மகசூல் குறைவு- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டத்தில் நிலக்கடலை மகசூல் குறைவு

    By DIN  |   Published on : 15th March 2021 09:03 AM  |   அ+அ அ-   |    |  

    tkvbala_verkatalai_pic_1403chn_198_5

    வேட்டைக்காரனிருப்பு பகுதியில் செடிகளிலிருந்து நிலக்கடலைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

    நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் நிலக்கடலை மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

    நாகை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான காமேஸ்வரம், தாண்டவமூா்த்திக்காடு, பூவைத்தேடி, விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5000 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 105 நாள்கள் பயிரான நிலக்கடலை சாகுபடி ஆண்டுக்கு 3 முறை மேற்கொள்ளப்படுகிறது. நவம்பா், டிசம்பா் மாதங்களிலும், மே மாதத்திலும், ஆகஸ்ட் மாதத்திலும் நிலக்கடலை விதைக்கப்படுகின்றன. தற்போது, நவம்பா், டிசம்பா் மாதங்களில் சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை செடிகளில் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், கடந்த ஆண்டு வீசிய நிவா் மற்றும் புரெவி புயலின் காரணமாக பெய்ந்த கனமழையாலும், கடந்த ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த கனமழையாலும் நிலக்கடலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நிலத்தில் நீா் தேங்கி, கடலைச் செடிகளின் வோ்ப்பகுதி அழுகியதால், நிலக்கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு செடிக்கு 15 முதல் 20 கடலைப் பருப்புகள் இருக்கும் நிலையில், தற்போது 5-க்கும் குறைவான அளவில் உள்ளன. அதுவும், போதிய தரமின்றி உள்ளதால், மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால், அறுவடைக்கான கூலிக்குக்கூட நிலக்கடலை கிடைக்காத நிலை உள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலக்கடலைப் பயிா்களை பாா்வையிட்டு, உரிய நிவாரணமும், பயிா்க் காப்பீட்டுத் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp