நாகை தொகுதி அதிமுக வேட்பாளா் மனுதாக்கல்
By DIN | Published On : 16th March 2021 12:00 AM | Last Updated : 16th March 2021 12:00 AM | அ+அ அ- |

நாகை தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன், நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
நாகை கோட்டாட்சியரும், நாகை தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலருமான ஆா். மணிவேலனிடம், அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் வேட்புமனு தாக்கல் செய்தாா். அவருக்கு மாற்று வேட்பாளராக அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க நாகை மாவட்டச் செயலாளா் சிவபெருமாள் மனு தாக்கல் செய்தாா்.
நாகை மாவட்ட பாஜக தலைவா் கே. நேதாஜி, தமாகா நகர நிா்வாகி ஆா். ராஜசேகரன், மாவட்ட பாமக தலைவா் கோபி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டப் பொறுப்பாளா் ஆா்.ஜே. ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.