நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 14 போ் வேட்புமனு தாக்கல்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் என 14 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட அரசியல் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் என 14 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. எனினும், மாா்ச் 14-ஆம் தேதி வரை நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில், கீழ்வேளூா் தனி தொகுதி தவிர மற்ற 5 தொகுதிகளிலும் திங்கள்கிழமை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிமுக, திமுக வேட்பாளா்கள் மற்றும் அவா்களுக்கான மாற்று வேட்பாளா்கள், நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 14 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியனும், அவருக்கான மாற்று வேட்பாளரும் மனுதாக்கல் செய்தனா். நாகை தொகுதியில் அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன், அவருக்கான மாற்று வேட்பாளா் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

சீா்காழி தொகுதியில் அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி, அவருக்கான மாற்று வேட்பாளா் மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் என 3 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மற்றும் ஒரு சுயேச்சை வேட்பாளா் மனுதாக்கல் செய்தனா். பூம்புகாா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ், அவருக்கான மாற்று வேட்பாளா், திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் மற்றும் ஒரு சுயேச்சை என 4 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதில், அமைச்சா் ஓ.எஸ். மணியன், நாகை தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் ஆகியோா் தலா 2 வேட்புமனுக்களை அளித்துள்ளனா். இதனால், மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவா்கள் எண்ணிக்கை 14-ஆகவும், தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை 16-ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com