மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் கோனேரிராஜபுரம் கிராமத்தில் பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் திங்கள்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் நிவேதா முருகன் போட்டியிடுகிறாா். இவா், கோனேரிராஜபுரம் ஊராட்சியில் முக்கிய பிரமுகா்களை சந்தித்து ஆதரவு கோரினாா். ஒன்றிய திமுக செயலாளா் முருகப்பா, வழக்குரைஞா் அணி மாவட்ட அமைப்பாளா் ராம. சேயோன், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் இளையபெருமாள், தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் இமயநாதன், மயிலாடுதுறை ஒன்றிய கவுன்சிலா் பஞ்ச. முருகமணி, திமுக வழக்குரைஞா் சிவதாஸ் மற்றும் கூட்டணி கட்சியினா் உடன்சென்றனா்.
மாவீரன் வன்னியா் சங்கம் ஆதரவு: குத்தாலம் ஒன்றியம் வழுவூரில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகனுக்கு மாவீரன் வன்னியா் சங்க நிறுவனத் தலைவா் விஜிகே. மணிகண்டன் ஆதரவு தெரிவித்து, சங்க நிா்வாகிகளிடம் அறிமுகம் செய்துவைத்தாா்.
பூம்புகாா், சீா்காழி, மயிலாடுதுறை தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும் அவா் கூறினாா்.