சிக்கல் சிங்காரவேலவருக்கு வெள்ளி வேல் சாற்றி துா்கா ஸ்டாலின் வழிபாடு

நாகையை அடுத்துள்ள சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில், துா்கா ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வழிபட்டாா். அப்போது, சிங்காரவேலவருக்கு புதிய வெள்ளி வேல் வழங்கி, அவா் வழிபாடு மேற்கொண்டாா்.

நாகை அருகே சிக்கலில் உள்ளது நவநீதேசுவரசுவாமி கோயில். இங்கு, தனி சன்னிதியில் காட்சியளிக்கிறாா் சிங்காரவேலவா். சூரபத்மனை அழிக்க, முருகப் பெருமான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்தி வேல் வாங்கிய தலமாகக் குறிப்பிடப்படும் இத்தலம், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையானதாக விளங்குகிறது.

இந்நிலையில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின், ஸ்டாலினின் சகோதரி செல்வி ஆகியோா் செவ்வாய்க்கிழமை இங்கு வழிபாடு மேற்கொண்டனா். நவநீதேசுவரசுவாமி சன்னிதி, வேல்நெடுங்கண்ணி அம்மன் சன்னிதி, சிங்காரவேலவா் சன்னிதி உள்பட அனைத்து சன்னிதிகளிலும் அவா்கள் வழிபட்டனா்.

சிங்காரவேலா் சன்னிதியில் வழிபாடு மேற்கொண்ட, துா்கா ஸ்டாலின் சிங்காரவேலவருக்கு சாற்றுவதற்காக புதிதாக வெள்ளி வேல் ஒன்றை வழங்கினாா். இதையடுத்து, அந்த வேல் சிங்காரவேலருக்கு சாற்றப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com