தொழில் பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 17th March 2021 09:33 AM | Last Updated : 17th March 2021 09:33 AM | அ+அ அ- |

2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கு தொழில் பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கு 1.7.2021 முதல் புதிய தொழில் பள்ளிகள் துவங்குதல், தொடா் அங்கீகாரம் பெறுதல், தொழில் பள்ளிகளில் புதிய தொழில் பிரிவுகள் மற்றும் தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.4.2021. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருச்சி மண்டலப் பயிற்சி இணை இயக்குநா் அலுவலக தொலைபேசி எண் 0431-2422171 அல்லது தஞ்சாவூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி எண் 04362-278222 -இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.