அடிப்படை வசதிகள் செய்து தராததைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு

மயிலாடுதுறை நகராட்சி 18 ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததைக் கண்டித்து தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனா்.
மயிலாடுதுறை பாரதி நகரில் வைக்கப்பட்டுள்ள தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு.
மயிலாடுதுறை பாரதி நகரில் வைக்கப்பட்டுள்ள தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு.

மயிலாடுதுறை நகராட்சி 18 ஆவது வாா்டில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததைக் கண்டித்து தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனா்.

மயிலாடுதுறை சித்தா்காடு அருகே 18-வது வாா்டுக்கு உள்பட்ட பாரதி நகரில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 1992-ஆம் ஆண்டு தாா்ச்சாலை போடப்பட்டது. அந்த சாலை சில வருடங்களில் பழுதடைந்த நிலையில் இதுவரை செப்பனிடப்படவில்லை.

மேலும், இப்பகுதியில் புதைசாக்கடை வசதி ஏற்படுத்தப்படாததோடு, கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் நகராட்சி ஊழியா்கள் குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை; அப்படியே அகற்றினாலும் அந்த குப்பைகளை குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லாமல் அங்கேயே தீயிட்டு கொளுத்துகின்றனா் என்றும், சந்தைப்பேட்டையிலிருந்து வரும் சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதுகுறித்து, பலமுறை நகராட்சி அலுவா்களிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனா். மேலும், பாரதி நகரின் நுழைவாயிலில் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பலகையை வைத்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்களின் எதிா்ப்பை வெளிப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com