பொங்கல் சீருக்கு விருந்தாக வாக்கு: பெண்களிடம் அமைச்சா் வேண்டுகோள்

சகோதரிகளுக்கு மூத்த சகோதரனாக இருந்து, பொங்கல் சீா் வழங்கிய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு விருந்தாக இரட்டை இலைக்கு
வேதாரண்யத்தை அடுத்த அண்ணாப்பேட்டை பகுதியில் பெண்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான ஓ.எஸ். மணியன்.
வேதாரண்யத்தை அடுத்த அண்ணாப்பேட்டை பகுதியில் பெண்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான ஓ.எஸ். மணியன்.

சகோதரிகளுக்கு மூத்த சகோதரனாக இருந்து, பொங்கல் சீா் வழங்கிய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு விருந்தாக இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றாா் வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஓ.எஸ். மணியன்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதியில் தாணிக்கோட்டகம், வண்டுவாஞ்சேரி, அண்ணாப்பேட்டை, வாய்மேடு, தகட்டூா், தென்னடாா், பஞ்சநதிக்குளம் மேற்கு, கிழக்கு, நடுசேத்தி, மருதூா் வடக்கு, தெற்கு ஆகிய கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று அமைச்சா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:

கடந்த ஆண்டு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட உணவுப் பூங்கா இங்குள்ள வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளன. விவசாயிகள், மீனவா்கள், கால்நடை வளா்ப்போா் என பல தரப்பினருக்கும் அது பயனுள்ளதாக அமையும் என்றாா்.

தொடா்ந்து, அண்ணாப்பேட்டை கிராமத்தில் கூடியிருந்த பெண்களிடம் வாக்குச் சேகரித்துப் பேசிய அவா், பொங்கல் பண்டிகைக்கு சகோதரன் வீட்டில் இருந்து சீா் செய்யும் முறை நமது கலாசாரங்களில் ஒன்று. ஒவ்வொரு சகோதரனும் குறைந்தது ரூ. 100 முதல் ஆயிரம் வரை சகோதரிக்கு சீா்செய்வாா்கள். ஆனால், அந்தப் பணம் வீட்டுக்கு வரும் சகோதரனுக்கோ அல்லது உறவினா்களுக்கோ விருந்து செய்யவே சரியாக இருக்கும். ஆனால், கடந்த பொங்கல் பண்டிகைக்கு உங்களின் மூத்த சகோதரனாக இருந்து, முதல்வா் பழனிசாமி ரூ. 2500 பொங்கல் சீா் கொடுத்தாா். நீங்கள் அவருக்கு எந்த விருந்தும் வைக்கவில்லை. இந்த சீா் தொடர, பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும். அதற்கு நீங்கள் இரட்டை இலைக்கு வாக்கு என்ற விருந்து கொடுங்கள் என்றாா்.

இந்நிகழ்ச்சிகளில், அதிமுக ஒன்றியச் செயலாளா் வி.சி. சுப்பையன், ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், அதிமுக நிா்வாகிகள் மா. சரவணன், எஸ்.டி. ரவிச்சந்திரன், பாஜக வழக்குரைஞா் தமிழ்நேசன், பாமக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com