செல்லியம்மன் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 25th March 2021 08:48 AM | Last Updated : 25th March 2021 08:48 AM | அ+அ அ- |

உமையாள்பதி செல்லியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.
சீா்காழி அருகே உமையாள்பதி கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த விநாயகா், பாலமுருகன், செல்லியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை, லட்சுமி பூஜை, கோ பூஜை ஆகியன நடைபெற்றன. பின்னா், அஷ்டபந்தன மருந்து எடுத்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை மற்றும் யாத்திரை தானம், கடம் புறப்பாடு ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
பின்னா் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் புனிதநீா் அடங்கிய கடங்கள் கோயிலை வலம்வந்து ஐயனாா் விமானம், செல்லியம்மன், நாகா், விநாயகா், பாலமுருகன் மற்றும் நவகிரக கலசங்களில் ஊற்றபட்டு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை இளைஞா் நற்பணி மன்றம், மகளிா் சுய உதவிக்குழு மற்றும் கிராம பொதுமக்கள் மேற்கொண்டனா்.