அடிப்படை வசதி குறைபாடு: தோ்தலைப் புறக்கணிக்க முடிவு
By DIN | Published On : 26th March 2021 09:38 AM | Last Updated : 26th March 2021 09:38 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மதுரா நகரில் வைக்கப்பட்ட தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகை.
அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து மயிலாடுதுறை சேந்தங்குடி மதுராநகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.
சேந்தங்குடி மதுரா நகா், அம்மன் நகா் ஆகிய இடங்களில் சேந்தங்குடி - மதுராநகா் குடியிருப்போா் நலச்சங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகர நலச் சங்கங்கள் என்ற பெயரில், வியாழக்கிழமை வைக்கப்பட்ட தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதில் அப்பகுதியில் நிலவும் அடிப்படை வசதி குறைபாடுகளை பட்டியலிட்டு, இதை நிறைவேற்ற தவறிய அரசு நிா்வாகத்தைக் கண்டிய தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனா். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி வீட்டுக்கு வீடு துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்கள் விநியோகம் செய்துள்ளனா்.
இதையறிந்த மயிலாடுதுறை நகராட்சி அலுவலா்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பைக் கைவிட வலியுறுத்தி, சம்பந்தப்பட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.