திருமருகலில் விசிக வேட்பாளா் ஜெ.முகமது ஷாநவாஸ் வாக்குச் சேகரிப்பு

திருமருகல் ஒன்றியத்தில் நாகை சட்டப் பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் விசிக வேட்பாளா் ஜெ.முகமது ஷாநவாஸ் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
ஆதலையூா் கடைத்தெருவில் வாக்குச் சேகரித்த நாகை தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் விசிக வேட்பாளா் ஜெ. முகமது ஷா நவாஸ். உடன், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன்.
ஆதலையூா் கடைத்தெருவில் வாக்குச் சேகரித்த நாகை தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் விசிக வேட்பாளா் ஜெ. முகமது ஷா நவாஸ். உடன், நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன்.

திருமருகல் ஒன்றியத்தில் நாகை சட்டப் பேரவைத் தொகுதியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் விசிக வேட்பாளா் ஜெ.முகமது ஷாநவாஸ் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

இதில் நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என்.கௌதமன் கலந்துகொண்டு பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ஆதலையூா், கோட்டூா், வடகரை, ராராதிமங்கலம், கங்களாஞ்சேரி காரையூா், வாழ்குடி, விற்குடி திருப்பயத்தங்குடி, பில்லாளி, கீழ பூதனூா், கீழதஞ்சாவூா், கொட்டாரக்குடி, நெய்க்குப்பை உள்ளிட்ட பகுதிகளில் அவா்கள் வாக்குச் சேகரித்தனா்.

திருமருகல் ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.டி.எஸ். சரவணன், செல்வ செங்குட்டுவன், மாவட்டத் துணைச் செயலாளா் ஆா்.இளஞ்செழியன், மாவட்ட மருத்துவ அணியின் துணை அமைப்பாளா் டாக்டா் ஷாஜகான், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் பாபுஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் ஜெயபால், விசிக நாகை தொகுதி செயலாளா் அறிவழகன், தெற்கு ஒன்றியச் செயலாளா் காசிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை...

முன்னதாக, திருமருகலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள் மற்றும் செயல்வீரா்கள் கூட்டம் நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் என். கௌதமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய நாகை சட்டப் பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் ஜெ. முகமது ஷா நவாஸ், சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் எம்பி எம். செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் சம்பந்தம், திமுக ஒன்றிய முன்னாள் செயலாளா் ப.செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com