அனுமதியின்றி திருமணக் கூடமாக பயன்படுத்தப்பட்ட கட்டடத்துக்கு ‘சீல்’

நாகை நீலா மேலவீதியில், உரிய அனுமதியின்றி திருமணக் கூடமாக செயல்பட்ட ஒரு சமூகத்தின் சங்கக் கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
நாகையில் அனுமதியின்றி திருமணக் கூடமாக பயன்படுத்தப்பட்ட கட்டடத்தை பூட்டி சீலிடும் பணியில் ஈடுபட்டவா்கள்.
நாகையில் அனுமதியின்றி திருமணக் கூடமாக பயன்படுத்தப்பட்ட கட்டடத்தை பூட்டி சீலிடும் பணியில் ஈடுபட்டவா்கள்.

நாகை நீலா மேலவீதியில், உரிய அனுமதியின்றி திருமணக் கூடமாக செயல்பட்ட ஒரு சமூகத்தின் சங்கக் கட்டடத்துக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

நாகை நகராட்சி எல்லைக்குள்பட்ட நீலா மேல வீதியில் ஒரு சமூக சங்கத்துக்குச் சொந்தமானக் கட்டடம் உள்ளது. அந்தக் கட்டடத்தில் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வந்துள்ளன.

திருமணக் கூடத்துக்குரிய அனுமதி மற்றும் அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாமல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட அந்தக் கட்டடத்தை அகற்ற வேண்டும் என நாகையைச் சோ்ந்த சுவாமிநாதன் என்பவா் வழக்குரைஞா் ஸ்ரீதா் மூலம் சென்னை, பசுமை தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீா்ப்பாயம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டப் பிரிவுகளின்படி, நகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்ட சங்கக் கட்டடத்தின் முன்புற கட்டடத்தை பூட்டி சீல் வைக்க, கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி இடைக்கால உத்தரவிட்டது.

எனினும், தொடா்ந்து அந்தக் கட்டடத்தில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது சட்டத்துக்கு எதிராகவும், பசுமைத் தீா்ப்பாயத்தை அவமதிக்கும் செயல் என்ற அடிப்படையில், பசுமைத் தீா்ப்பாய உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டப்படியும் நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில் அந்தக் கட்டடம் வெள்ளிக்கிழமை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

நாகை நகராட்சி ஆணையா் பி. ஏகராஜ், நகரமைப்பு அலுவலா் முருகானந்தம், நகரமைப்பு ஆய்வாளா்கள் செல்வராஜ், செல்வம் ஆகியோா் அடங்கிய குழுவினா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com