அமரநந்தீஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்

நாகை அமரநந்தீஸ்வர சுவாமி கோயில் பங்குனி உத்திர பிரமோத்ஸவ விழா தேரோட்டம் சனிக்கிழமை (மாா்ச் 27) நடைபெறுகிறது.
நாகை அமரநந்தீஸ்வர சுவாமி கோயில் பங்குனி உத்திர பிரமோத்ஸவ நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை இரவு கைலாய வாகனத்தில் வீதியுலா புறப்பாடாகிய சுவாமி- அம்பாள்.

நாகை அபீதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீஸ்வர சுவாமி கோயிலின் பங்குனி உத்திர பிரமோத்ஸவ விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 19) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரமோத்ஸவ விழா நிகழ்ச்சியாக தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை இரவு கைலாய வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதி புறப்பாடு நடைபெற்றது.

பிரமோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு யாக பூஜை நடைபெறுகிறது. சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து, தேருக்கு வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com