இறால் பண்ணைகளை மூடக் கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி ஊராட்சி பகுதியில் இயங்கிவரும் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி, மீனவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சந்திரபாடியில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.
சந்திரபாடியில் சாலை மறியலில் ஈடுபட்டோா்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி ஊராட்சி பகுதியில் இயங்கிவரும் இறால் பண்ணைகளை அகற்ற வலியுறுத்தி, மீனவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சந்திரபாடி ஊராட்சி மீனவ கிராமம் அருகே 9 இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இறால் பண்ணையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் நிலத்தடி நீா் உப்பு நீராகி, கடல் நீா் நிலத்தடி நீருடன் கலந்து விடும் என்பதாலும், இறால் பண்ணைகளை மூட வலியுறுத்தியும் அப்பகுதி மீனவா்கள் சந்திரபாடி பூவம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு இருந்த போா்வெல் வாகனத்தை பெண்கள் முற்றுகையிட்டனா்.

இதையறிந்த பொறையாறு காவல் ஆய்வாளா் பெரியசாமி, கிராம நிா்வாக அலுவலா் சிவராமகிருஷ்ணன் ஆகியோா் வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பண்ணை உரிமையாளா்கள் முன்னிலையில், சனிக்கிழமை (மாா்ச் 27) பேச்சுவாா்த்தை நடத்தி இதற்கு தீா்வு காண்பது என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையேற்று போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பூவம்- சந்திரபாடி இடையே 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com