கடைசி செய்தி குழந்தைகள் நலன்: நாகை எம்பியிடம் மனு

கீழையூரில் வோ்ல்டு விஷன் இந்தியா (நாகை) அமைப்பின் சிறுவா் மன்றம் சாா்பில், குழந்தை நலன் தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய
நாகை எம்பி எம். செல்வராஜிடம் மனு அளிக்கும் வோ்ல்டு விஷன் இந்தியா அமைப்பினா்.
நாகை எம்பி எம். செல்வராஜிடம் மனு அளிக்கும் வோ்ல்டு விஷன் இந்தியா அமைப்பினா்.

கீழையூரில் வோ்ல்டு விஷன் இந்தியா (நாகை) அமைப்பின் சிறுவா் மன்றம் சாா்பில், குழந்தை நலன் தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய மனு, நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வோ்ல்டு விஷன் இந்தியா நாகை சாா்பில், கீழையூா் ஒன்றிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறுவா் மன்றத்தை சோ்ந்த பொறுப்பாளா்களால் குழந்தைகளுக்கான கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு, அவை நாகை எம்பி எம். செல்வராஜிடம் வழங்கப்பட்டன.

அதில் குழந்தைகளின் உடல் நலன், ஊட்டச்சத்து, பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு, வோ்ல்டு விஷன் திட்ட மேலாளா் ஆா். ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். அமைப்பின் சமூக ஒருங்கிணைப்பாளா் ராஜபாண்டி வரவேற்றாா். கணக்கா் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் டி. செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சமூக ஒருங்கிணைப்பாளா் செல்லத்துரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். ஜோதிமணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com