குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வுகாண கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்

குடிநீா்ப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண கோரி நாகை நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகை நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
நாகை நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

குடிநீா்ப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண கோரி நாகை நகராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை நகராட்சிக்குள்பட்ட 12- ஆவது வாா்டு பகுதியான காடம்பாடி, என்.ஜி.ஓ.காலனி மற்றும் காளியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சரியான முறையில் குடிநீா் விநியோகம் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அருகிலுள்ள சுனாமி குடியிருப்புக்குச் சென்று அங்கிருந்து குடங்களில் தண்ணீா் எடுத்து வருகின்றனா். இதுகுறித்து, நாகை நகராட்சியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்த பயனும் இல்லை. இந்நிலையில், காடம்பாடி, என்.ஜி. ஓ. காலனி உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நாகை நகராட்சி அலுவலகம் முன் திரண்டு, குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, வெளிப்பாளையம் காவல் ஆய்வாளா் தியாகராஜன், நகராட்சி பொறியாளா் உள்ளிட்ட அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா் பிரச்னைக்கு உடனடி தீா்வுகாண நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்தால் நகராட்சி அலுவலகப் பணிகள் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com