பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: தோ்தல் புறக்கணிப்பு வாபஸ்

தோ்தல் நடத்தும் அலுவலா் நடத்திய சமரச பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து,

தோ்தல் நடத்தும் அலுவலா் நடத்திய சமரச பேச்சுவாா்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை சேந்தங்குடி மதுரா நகா் குடியிருப்போா் நலச்சங்கத்தினா் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனா்.

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி மதுரா நகரில் குளத்தின் வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை கண்டிப்பது, புதை சாக்கடை வசதி ஏற்படுத்தித் தரக்கோருவது, பகுதிநேர அங்காடி அல்லது நடமாடும் அங்காடி கோருவது, கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அப்பகுதியினா் தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக வியாழக்கிழமை அறிவிப்பு பேனா் வைத்திருந்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தனி வட்டாட்சியரும், தோ்தல் பறக்கும் படை அலுவலருமான விஜயராகவன் அப்பகுதி மக்களையும், மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் சுப்பையா, நகராட்சி பொறியாளா் எல்.குமாா் மற்றும் நகராட்சி சுகாதாரத்துறையினரை நிகழ்விடத்துக்கு அழைத்து சமரச பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில், குப்பைகளை தினசரி அகற்றுவது, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவது, பாலத்துக்கு கைப்பிடி அமைத்துத் தருவது, புதைசாக்கடை வசதியை ஏற்படுத்தித் தருவது என தீா்மானிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டு, அறிவிப்பு பதாகைகளை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com