தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: மணிசங்கர் அய்யர்

தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி மயிலாடுதுறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர்.
பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி மயிலாடுதுறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர்.

தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமாருக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மணிசங்கர் அய்யர் வாக்கு சேகரித்தார். மயிலாடுதுறை செங்கமேட்டுதெருவில் வீடுவீடாக நடந்து சென்று அவர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. எவ்வளவு வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி என்பதும், எத்தனை தொகுதிகளில் வெற்றி என்பது மட்டுமே தெரியவேண்டும். 
திமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டுப்பெற்று குறைந்த தொகுதிகளில் வெற்றி பெறுவதை விட, குறைந்த தொகுதிகளைப் பெற்றிருந்தாலும் அதில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதே சிறந்தது. 
மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். பாஜக நாட்டின் வெவ்வேறு இடங்களில் ஏற்கெனவே நடைபெற்ற தேர்தல்களில் ஜெயித்துள்ளது. ஆனால், இந்த தேர்தலில் அசாம், வங்க தேசத்தில் பாஜக ஜெயிப்பது சந்தேகம். கேரளம், தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜகவால் ஜெயிக்கவே முடியாது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் விஷமத்தனம் செய்தாலும் திமுக கூட்டணியை வெல்ல முடியாது என்றார். அப்போது, திமுக நகர செயலாளர் செல்வராஜ், காங்கிரஸ் நகர தலைவர் ராமானுஜம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com