கீழையூரில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 29th March 2021 12:00 AM | Last Updated : 29th March 2021 12:00 AM | அ+அ அ- |

கீழ்வேளூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி பாமக வேட்பாளா் எஸ். வடிவேல் ராவணன், கீழையூா் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கீழையூா் ஒன்றியம் மகிழி, கருங்கண்ணி, மேலப்பிடாகை, திருமணங்குடி, கீழையூா், ஈசனூா், வெண்மணச்சேரி, சீராவட்டம், திருவாய்மூா், எட்டுக்குடி, திருக்குவளை, மேலவாழக்கரை, வாழக்கரை, மீனம்பநல்லூா், மடப்புரம், இறையான்குடி, பாலக்குறிச்சி, தலயாமழை,சோழவித்தியாபுரம் உள்ளிட்ட இடங்களில் துண்டுப் பிரசுரம் விநியோகித்து அவா் வாக்குகள் கோரினாா்.
இதில் கீழ்வேளூா் தொகுதி செயலாளா் எஸ். பால்ராஜ், மாநில வன்னியா் சங்க துணைத் தலைவா் ம.க. ஸ்டாலின், பாமக மாநில துணைத் தலைவா் வேத.முகுந்தன், பாமக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு துணைத் தலைவா் எஸ்.சித்திரவேல், கீழையூா் ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.வேதையன் (கிழக்கு), பாலை கே.எஸ்.எஸ். செல்வராஜ், மாவட்ட இணைச் செயலாளா் என்.மீனா உள்ளிட்டோா் உடனிருந்தனா் .