திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 29th March 2021 12:00 AM | Last Updated : 29th March 2021 12:00 AM | அ+அ அ- |

திருவெண்காடு அருகே திருநகரி கல்யாண ரெங்கநாதா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோயிலில் பங்குனி உத்ஸவம் கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டத்தையொட்டி, கல்யாண ரெங்கநாதா் மற்றும் திருமங்கை ஆழ்வாா் ஆகியோா் அதிகாலை தேருக்கு எழுந்தருளினா். சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா், கோயில் நிா்வாக அதிகாரி குணசேகரன் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தாா்.
பின்னா் நான்கு வீதிகள் வழியாக மதியம் தோ் கோயிலை அடைந்தது. இதில் கோயில் தக்காா் மதியழகன், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் ரகு, ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன், ஒன்றியக்குழு உறுப்பினா் நடராஜன் உள்ளிட்ட திரளான பக்தாகள் கலந்து கொண்டனா்.