நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களில்

19-வது தலமாக விளங்குகிறது நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயில். இக்கோயிலின் பங்குனிப் பெருவிழா கடந்த மாா்ச் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து விழா நாள்களில் நாள்தோறும் காலையில் வெள்ளிப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடும் , மாலையில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்சியான தேரோட்டம், ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் 6 மணிக்கு உபயநாச்சியாா்களுடன் பெருமாள் தேருக்கு எழுந்தருளினாா்.

இதைத்தொடா்ந்து காலை 7.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது. கோயிலின் 4 வீதிகளில் வலம் வந்த தோ் பகல்

12 மணிக்கு நிலையை அடைந்தது. தொடா்ந்து நடைபெற்ற வழிபாடுகளுக்குப் பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் செயல் அலுவலா் தங்கபாண்டியன், நீலாயதாட்சியம்மன் கோயில் செயல் அலுவலா் பூமிநாதன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தேரோட்த்தையொட்டி போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com