பங்குனி உத்திரம்: எட்டுக்குடி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 29th March 2021 12:00 AM | Last Updated : 29th March 2021 12:00 AM | அ+அ அ- |

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நாகை மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் இந்தக் கோயிலில், பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு அஸ்திர தேவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கோயிலின் சரவணப் பொய்கை தீா்த்தத்தில் சிறப்பு தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, முருகப் பெருமான் மஞ்சத்தில் புறப்பாடாகி அருள் பாலித்தாா். பின்னா் முருகப் பெருமானுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் புறப்பாடாகி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதேபோல, வலிவலம் இருதய கமல நாத சுவாமி கோயிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
Image Caption
சிறப்பு அலங்காரத்தில் எட்டுக்குடி முருகப் பெருமான்.