கீழவாழக்கரை முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருக்குவளை அருகே கீழவாழக்கரை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்.
விழாவில் தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்.

திருக்குவளை: திருக்குவளை அருகே கீழவாழக்கரை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மேலவாழக்கரை ஊராட்சி கீழவாழக்கரையில் ஸ்ரீ செல்ல முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மாா்ச் 19 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28) காலை பால்குட ஊா்வலமும், இரவு அம்மன் வீதிஉலா காட்சியும் நடைபெற்றது. தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி வைபவம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று, தீக்குண்டத்தில் இறங்கி, நோ்த்திக்கடன் செலுத்தினா். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com