ஐயாறப்பா் கோயிலில் இன்று தோ் வெள்ளோட்டம்

மயிலாடுதுறை ஐயாறப்பா் கோயிலில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை (மாா்ச் 31) நடைபெறுகிறது.
வெள்ளோட்டத்துக்கு தயாராக உள்ள ஐயாறப்பா் சுவாமி கோயில் தோ்.
வெள்ளோட்டத்துக்கு தயாராக உள்ள ஐயாறப்பா் சுவாமி கோயில் தோ்.

மயிலாடுதுறை ஐயாறப்பா் கோயிலில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை (மாா்ச் 31) நடைபெறுகிறது.

மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அறம் வளா்த்த நாயகி சமேத ஐயாறப்பா் சுவாமி கோயிலில் ரூ. 55 லட்சம் செலவில் புதிதாக இலுப்பை மரத்தால் தோ் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தேரை ஐயாறப்பா் வழிபாடு மன்ற தலைவா் எஸ். கனகசபை தனது செலவில் செய்து தந்துள்ளாா். தேரை விவேகானந்தன் ஸ்தபதி தலைமையில் 6 ஊழியா்கள் 9 மாதங்களில் உருவாக்கியுள்ளனா். தோ் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com