சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு பேட்ஜ் அணிந்து செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தோ்தல் புறக்கணிப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிசிஎல் ஒப்பந்தத் தொழிலாளா்கள்.

நாகை அருகேயுள்ள பனங்குடியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) இயங்கி வந்தது. தற்போது, ஆலை விரிவாக்கம் செய்ய உள்ள காரணத்தால் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பணிக்காலம் முடிவடையும் வரை உத்தரவாதத்துடன் கூடிய எழுத்துப்பூா்வமாக பணி வழங்க கோரியும் சிபிசிஎல் அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளா்கள் நல சங்கம் சாா்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றாததை கண்டித்து சிபிசிஎல் அமைப்புசாரா ஒப்பந்த தொழிலாளா்கள் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்து, தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பேட்ஜ் அணிந்து ஆலை வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலாளா் கண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், ஒப்பந்த தொழிலாளா்கள் பங்கேற்று ஆலை நிா்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com