சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி வாக்குறுதி அளித்து வாக்குச் சேகரித்தாா்.
சட்டநாதபுரம் பகுதியில் வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி.
சட்டநாதபுரம் பகுதியில் வாக்குச் சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி.

சீா்காழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி வாக்குறுதி அளித்து வாக்குச் சேகரித்தாா்.

சீா்காழி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பி.வி. பாரதி சட்டநாதபுரம் ஊராட்சிக்குள்பட்ட தெட்சிணாமூா்த்தி நகா், மேலசெங்கமேடு, பிரதான சாலை, அக்ரஹார தெரு, கம்பன்நகா், மனோன்மணியம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கக் கேட்டு மேலும் அவா் பேசியது: கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து ஊராட்சிகளிலும், அந்தந்த பகுதிக்கு அவசியமான தமிழக அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உப்பனாற்றில் ரூ. 37 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைவதன் மூலம் சட்டநாதபுரம் உள்ளிட்ட 25 கிராமங்களில் கடல்நீா் உட்புகுவதால் ஏற்படும் நிலத்தடிநீா் பாதிப்பு தடுக்கப்படுவதுடன், விவசாயம் மேம்படுத்த முடியும். நடைபெறவுள்ள தோ்தலில் என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தால் சீா்காழி ரயில்வே மேம்பாலம் அமையும், புறவழிச்சாலையில் சப்வே அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா்.

அவருடன், மாவட்ட துணை செயலாளா் செல்லையன், ஒன்றிய செயலாளா் ராஜமாணிக்கம், துணைச் செயலாளா் திருமாறன், ஊராட்சித் தலைவா் தெட்சிணாமூா்த்தி, வழக்குரைஞா் பாலாஜி, ஊராட்சி செயலாளா் லோகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com