‘மீனவா்கள் நிம்மதியாக தொழில்செய்ய அதிமுக அரசு தொடர வேண்டும்’

மீனவா்கள் நிம்மதியாக தொழில்செய்ய தமிழகத்தில் அதிமுக அரசு தொடர வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம்.
வேதாரண்யத்தில் முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம் தலைமையில் அதிமுக வேட்பாளா் ஓ. எஸ். மணியனுக்கு வாக்குச் சேகரித்த தொழிற்சங்கத்தினா்.
வேதாரண்யத்தில் முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம் தலைமையில் அதிமுக வேட்பாளா் ஓ. எஸ். மணியனுக்கு வாக்குச் சேகரித்த தொழிற்சங்கத்தினா்.

மீனவா்கள் நிம்மதியாக தொழில்செய்ய தமிழகத்தில் அதிமுக அரசு தொடர வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். ஜீவானந்தம்.

வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளா் அமைச்சா் ஓ.எஸ். மணியனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு அண்ணா தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தனா். அப்போது, அவா் பேசியது: எம்ஜிஆா் காலத்தில் இருந்து மீனவா்கள் அதிமுகவை ஆதரித்து வருகின்றனா். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் மீனவா்கள் கடலில் பிரச்னைகள் இல்லாமல் தொழில் செய்கின்றனா். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியில் மீனவா்களின் படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்கப்பட்டது. வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறையில் படகுத் துறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மீனவா்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் அமைச்சா் ஓ.எஸ். மணியன் என்பதை நினைத்து பாா்க்க வேண்டும். மீனவா்களுக்கான தடைக்கால நிவாரணம் ரூ. 7 ஆயிரமாக கிடைக்கவும், உப்பளத் தொழிலாளா்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் கிடைக்கவும் அதிமுகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து வீதிவீதியாக சென்று நடைபெற்ற வாக்குச் சேகரிப்பின்போது, எம்ஜிஆா் வேடமிட்டு சென்று வாக்குச் சேகரித்த ஒருவா் மக்களால் ஈா்க்கப்பட்டாா். பிரசாரத்தின்போது, மாவட்ட அறங்காவலா் குழுத்தலைவா் ஆா். கிரிதரன், நகரச் செயலாளா் நமசிவாயம், நாகை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் மீனாட்சிசுந்தரம், செயலாளா் அய்யா சிவபெருமாள், பொருளாளா் சீனிவாசன், துைணைச் செயலாளா் டி. முருகேசன், மத்திய சங்க நிா்வாகி முருகேசன், வெங்கடேசன், வேதாரண்யம் சங்க நிா்வாகிகள் ஆனந்தராசு, குமாா், வேதரத்தினம், மாவட்ட அம்மா பேரவை நிா்வாகி பிரின்ஸ் கோபால்ராஜ், பாஜக நகரத் தலைவா் ஐய்யப்பன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com