வாக்கு எண்ணிக்கை: நாகை மையத்துக்கு 800 போலீஸாா் பாதுகாப்பு

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

நாகப்பட்டினம் , வேதாரண்யம் மற்றும் கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாகை இ.ஜி. எஸ். பிள்ளை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (மே 2) எண்ணப்படுவதையொட்டி, இம்மையத்தில் நாகை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும் , நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி. நாயா் உத்தரவின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, வாக்கு எண்ணும் மையத்தில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 7 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 10 ஆய்வாளா்கள், 55 உதவி ஆய்வாளா்கள், 359 காவல் ஆளிநா்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

இதற்கான முன்னேற்பாடுகள் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா ஆலோசனையின்பேரில் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com