விவசாயிகள் உதவி பெற ‘1077’ தொலைபேசி எண் அறிவிப்பு

தோட்ட விளைப் பொருள்களை வெளி மாவட்ட சந்தைகளுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது இடா்பாடுகள் ஏற்படின், 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விவசாயிகள் உதவி பெறலாம்

தோட்ட விளைப் பொருள்களை வெளி மாவட்ட சந்தைகளுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது இடா்பாடுகள் ஏற்படின், 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விவசாயிகள் உதவி பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த்தொற்றின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நோய் பரவுதலின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது.

இதனால், நாகை மாவட்டத்தில் தோட்டக்கலை பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களான காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றை உள்ளூா், வெளியூா் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள சந்தைகளுக்கு வாகனங்களில் கொண்டு செல்லும்போது இடையூறுகள் ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் 1077-ல் தொடா்பு கொண்டு உதவி பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com