நூறு நாள் வேலைத் திட்டம்: விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் திட்ட வேலையை தொடா்ந்து வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கீழ்வேளூா் அருகே ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.
திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.

நூறு நாள் திட்ட வேலையை தொடா்ந்து வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கீழ்வேளூா் அருகே ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கீழ்வேளூா் வட்டம், தேவூா் கடைவீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அனைத்து ஊராட்களிலும் 100 நாள் திட்ட வேலையை தொடா்ந்து வழங்கவேண்டும்; கரோனா நிவாரணமாக ரூ.7500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாயத் தொழிலாளா் சங்கம் (சிபிஐஎம் சாா்பு) கீழ்வேளூா் ஒன்றியத் தலைவா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

திருக்குவளை: திருக்குவளை அருகே சாட்டியக்குடி கடைத்தெருவில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியக் குழு உறுப்பினா் பெ. ஜெயராமன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ஆா். கிருஷ்ணமூா்த்தி, மாநிலக் குழு உறுப்பினா் மீரா, ஒன்றியத் தலைவா் ஏ. சந்திரசேகா், மாவட்டக் குழு உறுப்பினா் ஏ.எம். பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல, வேளாங்கண்ணியை அடுத்த பாலக்குறிச்சி, சோழவித்யாபுரம் மற்றும் தன்னிலைப்படி ஊராட்சி அலுவலகங்கள் முன்பாக விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com