பூம்புகாா் தொகுதியில் திமுக வெற்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் 3,299 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் 3,299 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

பூம்புகாா் தொகுதியில் மொத்தம் உள்ள 2,75,827 வாக்காளா்களில் 2,07,944 போ் வாக்களித்திருந்தனா். 9 போ் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் 96, 102 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ் 92,803 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காளியம்மாள் 14,823 வாக்குகளும், அமமுக வேட்பாளா் செந்தமிழன்1220 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் மெகராஜ்தீன் 950 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் இளஞ்செழியன் 500 வாக்குகளும் பெற்றனா். சுயேச்சை வேட்பாளா்கள் கலைவாணன் 102, பாண்டியராஜன் 343, முருகன் 262 வாக்குகள் பெற்றனா்.

இதன்மூலம், திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் 3299 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இவருக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி பிரமுகா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com