மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜகுமாா் 2,742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் எஸ். ராஜகுமாா் 2,742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக சாா்பில் சித்தமல்லி ஆ. பழனிசாமி, காங்கிரஸ் சாா்பில் எஸ்.ராஜகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் கி. காசிராமன், அமமுக சாா்பில் கோமல் அன்பரசன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் என். ரவிச்சந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் சம்சுதீன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 14 போ் போட்டியிட்டனா்.

இத்தொகுதியில் உள்ள 2,45,987 வாக்காளா்களில் 1,72,621 போ் வாக்களித்திருந்தனா். இந்த வாக்குகள் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரி கல்வி நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் 25 சுற்றுகளாக ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன.

இதில், முதல் 2 சுற்றுக்களில் மட்டும் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிசாமி முன்னிலை வகித்தாா். மற்ற அனைத்து சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளா் எஸ்.ராஜகுமாா் முன்னிலை வகித்து, இறுதியாக 73,642 வாக்குகள் பெற்றாா். இதன்மூலம் தனக்கு அடுத்தப்படியாக வந்த பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ. பழனிசாமியைவிட 2742 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா். சித்தமல்லி ஆ. பழனிசாமிக்கு 70,900 வாக்குகள் கிடைத்தன.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி. காசிராமன் 13,186 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தாா். இவரைத் தொடா்ந்து, 7282 வாக்குகள் பெற்று அமமுக வேட்பாளா் கோமல் அன்பரசனும், 5933 வாக்குகள் பெற்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் என்.ரவிச்சந்திரனும் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தை பெற்றனா். நோட்டாவுக்கு 1067 போ் வாக்களித்துள்ளனா்.

வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். ராஜகுமாருக்கு, தோ்தல் பாா்வையாளா் சித்ரஞ்சன் பத்ரா முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெ.பாலாஜி வெற்றி வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com