முழு பொதுமுடக்கம்: வெறிச்சோடிய வீதிகள்

நாகை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் முழு பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

நாகை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் முழு பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவருவதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பொதுமுடக்கத்தில் மீண்டும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. தொடா்ந்து, ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் 2-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கீழ்வேளூா், வேதாரண்யம், நாகூா், திருமருகல், திருக்குவளை உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள், பால் கடைகள் மட்டும் செயல்பட்டன. ஓரிரு உணவகங்களில் பாா்சல் சேவை மட்டும் நடைபெற்றது. பேருந்து போக்குவரத்து, கனரக வாகனப் போக்குவரத்து, வாடகை வாகனங்களின் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டிருந்தன.

இதற்கிடையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ால், முடிவுகளை அறிந்த கொள்ள பெரும்பாலானோா் வீடுகளில் முடங்கினா். இதனால், காலை முதலே வீதிகள் வெறிச்சோடியிருந்தன.

நாகை மாவட்டத்தின் நகா்ப் பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமப் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com