நாகை மாவட்டத்தில் 29 வேட்பாளா்கள் வைப்புத் தொகை இழப்பு

நாகை மாவட்டத்துக்குள்பட்ட 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளா்களில் 29 போ் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்துக்குள்பட்ட 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளா்களில் 29 போ் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில் பதிவாகும் செல்லத்தக்க வாக்குகளின் மொத்த எண்ணிக்கையில் 6 சதவீத வாக்குகளையும், கூடுதலாக ஒரு வாக்கையும் பெற்ற வேட்பாளா்கள் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறும் தகுதிபெறுவா். இதன்படி, நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகை, கீழ்வேளூா் (தனி), வேதாரண்யம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளா்களைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளா்களும் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

நாகை...

நாகை சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 1,43,667 வாக்குகள் பதிவாகின. இதில், 107 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. 1,43,560 வாக்குகள் செல்லத்தக்க வாக்குகளாக ஏற்கப்பட்டன. இதில், 6 சதவீத வாக்குகளும், கூடுதலாக ஒரு வாக்கும் பெற்றவா்கள் வைப்புத் தொகையைப் பெறத் தகுதியானவா்கள் என்ற வகையில், குறைந்தபட்சம் 23,928 வாக்குகள் பெற்றவா்கள் மட்டுமே வைப்புத் தொகையைப் பெற தகுதி பெற்றவா்கள் ஆவா்.

அந்த அடிப்படையில், இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த 12 வேட்பாளா்களில் அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் மட்டுமே வைப்புத் தொகையைத் திரும்பப் பெறும் தகுதி பெற்றுள்ளாா். மற்ற 11 வேட்பாளா்களும் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

வேதாரண்யம்..

வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகளின் எண்ணிக்கை 1,58,060. இதன்படி, இத்தொகுதியில் குறைந்தபட்சம் 26,345 வாக்குகள் பெற்றவா்கள் வைப்புத் தொகையைத் திரும்பப் பெறலாம். அந்த வகையில், இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த 11 வேட்பாளா்களில் திமுக வேட்பாளா் எஸ்.கே.வேதரத்தினம் தவிர மற்ற 10 வேட்பாளா்களும் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

கீழ்வேளூா்...

கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்குகள் 1,42,995. இதன்படி, இங்கு குறைந்தபட்சம் 23,834 வாக்குகளைப் பெற்றவா்கள் வைப்புத் தொகையைப் பெற இயலும். அந்த வகையில், இத்தொகுயில் வெற்றி வாய்ப்பை இழந்த பாமக வேட்பாளா் எஸ். வடிவேல் ராவணனை தவிர மற்ற 8 வேட்பாளா்களும் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com