கரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், கிருமி நாசினி செவ்வாய்க்கிழமை தெளிக்கப்பட்டது.
வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்.

வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரையில் 3 போ், முனீஸ்வரன் கோயிலடியில் 2 போ் என தொற்று உறுதி செய்யப்பட்ட 11 போ் நாகை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். இதனிடையே, தனியாா் வங்கி ஊழியா்கள் இருவருக்கு தொற்று உறுதியானதால் வங்கி மூடப்பட்டுள்ளது.

வேதாரண்யம் நீதிமன்ற பணியாளா்கள் உள்பட 51 பேருக்கு பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டன. எனவே கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பணியில் வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரராஜன் தலைமையிலான சுகாதாரப் பணி, மருத்துவக் குழுவினா் ஈடுபட்டனா். வீதிகள், பொது இடங்களில் கிரிமி நாசினி தெளிக்கும் பணியை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com