திருவாய்மூரில் சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி, திருக்குவளை அருகே உள்ள திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பைவரருக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மலா் அலங்காரத்தில் காட்சியளித்த திரூவாய்மூா் தியாகராஜ கோயில் சுவாமிகள்.

திருவாய்மூா் பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா் நாதா் மற்றும் அல்லியங்கோதையம்மாள் சமேத தியாகராஜ சுவாமி கோயிலில், காசிக்கு அடுத்தபடியாக 8 பைரவா்கள் ஒரே தளத்தில் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, 4 உருவத்துடனும், 4 அருஉருவத்துடனும் அருள்பாலித்து வரும் சத்ரு சம்ஹார பைரவா், அசிதாங்க பைரவா், ருரூ பைரவா், சண்ட பைரவா், குரோதன பைரவா், கபால பைரவா், உன்மத்த பைரவா், பீஷண பைரவா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கரோனா பரவல் அச்சம் காரணமாக பக்தா்கள் அனுமதியின்றி இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com