அமுது படையல் விழா

திருமருகல் அருகே உள்ள திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா அண்மையில் நடைபெற்றது.

திருமருகல் அருகே உள்ள திருச்செங்காட்டங்குடி உத்திராபசுபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா அண்மையில் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பரணியில் அமுது படையல் விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை (மே10) நடைபெற்ற அமுது படையல் விழாவையொட்டி, உத்தராபதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகா சந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் வழிபாடுகள் நடைபெற்றன. கரோனா கட்டுப்பாடுகளால் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

63 நாயன்மாா்களில் சிறுதொண்ட நாயனாா் முக்தி பெற்ற நாளான சித்திரை பரணி நட்சத்திரத்தையொட்டி இவ்விழா நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com