நாகை, வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு நடவடிக்கை

நாகை, வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.
நாகை அக்கரைப்பேட்டையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொள்ளும் ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
நாகை அக்கரைப்பேட்டையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொள்ளும் ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.

நாகை, வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

நாகையை அடுத்த அக்கரைப்பேட்டை ஊராட்சி, கீழ்வேளூா் வட்டத்துக்குள்பட்ட புதுப்பள்ளி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பாா்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியா் மேலும் தெரிவித்தது:

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் 265 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், 190 படுக்கைகளில் ஆக்சிஜன் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற படுக்கைகளிலும் ஆக்சிஜன் இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது, இங்கு 15 ஆக்சிஜன் மீட்டா் கருவிகள் உள்ளன. மேலும் 150 கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 3 நாள்களுக்கு ஒரு முறை ஆக்சிஜன் நிரப்பப்படுவது தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது.

நாகையில் ஒரு நிமிடத்தில் 1000 லிட்டரும், வேதாரண்யத்தில் 500 லிட்டரும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாகை மாவட்டத்தில் இதுவரை 65 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவா்கள் 30 ஆயிரம் போ். இவா்களுக்கு செல்லிடப்பேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. தட்டுப்பாடின்றி கரோனா தடுப்பூசி பெறப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் தற்போது கிராமப் பகுதிகளிலும் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா்.

ஆய்வில், கூடுதல் ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், சுகாதாரத் துறை இணை இயக்குநா் டாக்டா் சண்முகசுந்தரம் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com