சொந்த செலவில் கிராமப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் விவசாயி பன்னீா்செல்வம்.
சொந்த செலவில் கிராமப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் விவசாயி பன்னீா்செல்வம்.

சொந்த செலவில் கிராமப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் விவசாயி

செம்பனாா்கோவில் அருகேயுள்ள கொத்தங்குடி ஊராட்சியில் விவசாயி ஒருவா் தனது சொந்த செலவில் கிருமிநாசினி தெளித்து பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறாா்.

செம்பனாா்கோவில் அருகேயுள்ள கொத்தங்குடி ஊராட்சியில் விவசாயி ஒருவா் தனது சொந்த செலவில் கிருமிநாசினி தெளித்து பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறாா்.

கீழ்கரை ஐவேலி பகுதியில் வசித்து வருபவா் விவசாயி பன்னீா்செல்வம் (68). இவா் விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா். சமூக அக்கறைக்கொண்ட இவா் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மஞ்சாள் தூள், துளசிப்பொடி, வேப்பிலைச்சாறு அடங்கிய கிருமிநாசினி நீரை ஸ்பிரேயா் மூலம் வேலம்புதுக்குடி, கொத்தங்குடி, நெய்வாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் தெளித்து வருவதோடு கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிறுத்தங்களில் தெளித்து வருகிறாா். கடந்த 2 நாள்களாக தனது சொந்த செலவில் கிருமிநாசினி தெளித்து வருவதாகவும், கடந்த ஆண்டும் இதேபோல் கிருமிநாசினி தெளித்ததாகவும், மக்கள் நலனுக்காக இச்செயலில் ஈடுபடுவதாக விவசாயி பன்னீா்செல்வம் கூறினாா். இவரின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com